காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ”அரசியல் உயிர்வாழ்வைப் பாதுகாப்பதற்காகவும் பதவியை தக்க வைத்து கொள்வதற்காகவும்” நடத்தப்பட்ட போர் என வர்ணித்து, 41 இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் இராணுவ சேவையைத் தொடரப் போவதில்லை என்று நேற்று அறிவித்தனர்.
இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் சைபர் போர் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தலைமைத் தளபதி இயல் ஜமீர், மற்றும் பிற அமைச்சரவை உறுப்பினர்களுக்கு கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி, தங்கள் மறுப்பை வெளிப்படுத்தினர்.
கையொப்பமிட்ட இராணுவ வீரர்கள் “பணயக்கைதிகளுக்கான வீரர்கள்” என்ற தலைப்பின் கீழ் கடிதத்தை எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், “ஆளும் கூட்டணியைப் பாதுகாப்பதே, இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாப்பதே” நோக்கம் என்று வலியுறுத்தி, இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் முடிவை அவர்கள் விமர்சித்தனர்.
“நெதன்யாகுவின் உயிர்வாழும் போரில்” பங்கேற்க மாட்டோம், தங்கள் மறுப்பைப் பகிரங்கப்படுத்துவதாக உறுதியளித்தனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இஸ்ரேலிய துருப்புக்களை காசாவில் இருந்து முழுமையாக திரும்பப் பெறுவதற்கும், பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கும் ஈடாக அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் பலமுறை முன்வந்துள்ளது.
இருப்பினும், நெதன்யாகு அந்த விதிமுறைகளை நிராகரித்து, பலஸ்தீன எதிர்ப்புப் பிரிவுகளை நிராயுதபாணியாக்குவதையும், காசா மீது புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் நீக்க வலியுறுத்தினர்.
இஸ்ரேலிய எதிர்க்கட்சி மற்றும் பணயக்கைதிகளின் குடும்பங்கள் நெதன்யாகு தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகளை திருப்திப்படுத்தவும் அதிகாரத்தைத் தக்கவைக்கவும் போரை நீட்டிப்பதாக இஸ்ரேலிய வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
56 பணயக்கைதிகள் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது, அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், சித்திரவதை, பட்டினி மற்றும் மருத்துவ புறக்கணிப்பு உட்பட கடுமையான நிலைமைகளின் கீழ் 10,100 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச போர் நிறுத்த அழைப்புகளை நிராகரித்த இஸ்ரேலிய இராணுவம், அக்டோபர் 2023 முதல் காசா மீது கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்துள்ளது, இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 55,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.