இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கான போட்டியில் இலங்­கையைச் சேர்ந்த முஹம்மத் சப்வான் சாதனை!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கு மத்தியில் நடை­பெ­ற்ற அல்­குர்ஆன் மனனப் போட்­டியில்
இலங்­கையைச் சேர்ந்த அஷ்ஷேக் முஹம்மத் சப்வான் முஹம்மத் பாரூக் (மதனி, அப்பாஸி) முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாத்தளை நிககொல்லையை பிறப்பிடமாக் கொண்ட அஷ்ஷெய்க் சப்வான் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கலா­பீடத்தில் ஷரீஆக் கல்வியை பூர்த்தி செய்து மதீனா இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டவியல் பீடத்தில் முதற்தர சித்தியில் தனது கலைமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்து தற்போது சார்ஜாவில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியராக பணிபுரிகின்றார்.

பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப் போட்டியில் இலங்கை ஆசிரியர் ஒருவர் இறுதிச் சுற்று வரை முன்னேறி முதலாவது இடத்தைப் பெற்றது முதற்தடவையாகும்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...