உடுநுவர, மாஹோ மற்றும் போரா சமூகத்துக்கான காதிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன

Date:

கண்டி மாவட்டத்தின் உடுநுவர, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ (மாஹோ, வாரியபொல, நிக்கவரட்டிய, கல்கமுவ, அம்பன்பொல, ஜாகம, பாலுகடவல, வல்பாலுவ, கனுக்கெட்டிய, அபுக்காகம மற்றும் அண்டிய பிரதேச சிறு கிராமங்கள்) மற்றும் போரா சமூகங்களுக்கான காதி நீதிபதிகளை நியமிப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

விண்ணப்பதாரிகள் ஆணாக இருக்க வேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகள், மௌலவிகள், அல் ஆலிம் சான்றிதழ் உள்ளவர்கள், சட்டத்தரணிகள், அரச சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக 7,500 ரூபாவும் இதர செலவுகளுக்காக 6,500 ரூபாவும் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2025 ஜூலை 4 ஆம் திகதி, மேலதிக விபரங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதிய வர்த்தமானியில்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...