காசா முறுகலை 2 வாரங்களுக்குள் முடித்து வைக்கவும் ஆபிரகாம் உடன்படிக்கையை சிரியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் விஸ்தரிக்கவும் டிரம்பும்-நெதன்யாகுவும் பேச்சு: இஸ்ரேல் ஹயோம் பத்திரிகை தகவல்

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூலோபாய விவகாரங்களுக்கான அமைச்சர் டொன் டேமர் ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடலொன்று ஈரானின் அணு உலைகள் மீதான தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்றுள்ளதாக ‘இஸ்ரேல் ஹயோம்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உரையாடலின் போது மத்தியக் கிழக்கு சமாதானத்திற்காக பல்வேறு திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

காசா முருகலை இருவார காலத்திற்குள் முடித்து வைக்கவும் ஹமாஸை நீக்கிவிட்டு அதற்கு பகரமாக காசா பகுதியை நிர்வகிப்பதற்கு எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட நான்கு அரபு நாடுகளை நியமிப்பது எனவும் எஞ்சியிருக்கின்ற ஹமாஸ் உறுப்பினர்களை வேறு நாடுகளுக்கு நாடு கடத்தவும் பணயக் கைதிகளை மீட்டெடுப்பதெனவும் உரையாடப்பட்டுள்ளது.

உலகில் குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்ளும் பல நாடுகளுக்கும் காசா மக்கள் அனுப்பி வைக்கப்படுவர். ஆபிரகாம் ஒப்பந்தத்தினை இஸ்ரேலை அங்கீகரித்து உத்தியோகப்பூர்வ உறவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் வகையில் சிரியா சவூதி அரேபியா மற்றும் இன்னும் பல அரபு, முஸ்லிம் நாடுகளுக்கும் விரிவாக்கப்படும்.

பலஸ்தீன அதிகாரசபை சீர்திருத்தப்படுவதைப் பொருத்து இரு நாடுகள் தீர்வுக்கு இஸ்ரேல் தனது விருப்பதை தெரிவிக்கும்  எனப் பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டதாக ‘இஸ்ரேல் ஹயோம் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியினை இஸ்ரேலின் பிரதமரின் அலுவலகம் ஏற்றுக்கொள்ளவோ அல்லது வெள்ளை மாளிகை மறுக்கவோ இல்லை.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...