கொழும்பு மாநகரசபையின் முதல்வர் தெரிவு:ஆரம்பமானது இரகசிய வாக்கெடுப்பு

Date:

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில்  இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இதேவேளை கொழும்பு மாநகர மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாகக் கோரி சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.

மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டு சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக சபையில் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் உள்ளுராட்சி ஆணையாளர் வாக்குச் சீட்டை வாசித்துக் காட்டியதுடன், தமிழ் மொழியிலும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அச்சிட்டு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...