புத்தளம் ஸாஹிராவில் ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வுகள்..!

Date:

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின்படி, ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்ற முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வில் புத்தளம் கல்வி வலயத்தின் புத்தளம் வடக்கு கல்விப் பணிப்பாளர், திருமதி அஸ்கா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வின் தலைமை பொறுப்பை பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எஸ். ரஸாத் அவர்கள் வகித்தார். இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக பஹன மீடியா பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளர், அஷ்ஷெய்க், எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் (கபூரி) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ஹிஜ்ரி புத்தாண்டின் முக்கியத்துவம், அது கற்றுத் தரும் பாடங்கள் குறித்து விளக்கினார். முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுதல், வாழ்க்கையில் குறிக்கோள்களை அடைவதற்கு தியாகத்தின் அவசியம், சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பு குழுக்களின் பங்கு போன்ற அம்சங்களை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...