அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு உத்தரவு!

Date:

அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் திரிபு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ள நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, மேல் மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பி.என். தம்மிந்த குமார கையொப்பமிட்ட கடிதம் மேற்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வைரஸ் பரவுதல் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...