சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர் நடத்தி வரும்  “சபாத் இல்லத்தை” உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வில், தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்ததுடன், சபாத் இல்லத்தினை எதிர்த்து ஒருமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்போது பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும் மதசார்பற்ற துறையிற்கும் முரணான இத்தகைய அமைப்புகள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...