துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு

Date:

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு  ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை காம்ஸே தாஹா ஓசெரென் மற்றும் டாக்டர் யால்சின் ஜென்ச் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

இந்த சிறப்பான விழாவில் பலர் பங்கேற்றனர். அதில், பல தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், இஸ்தான்புல் மற்றும் நெவ்செஹிர் நகரங்களின் இலங்கை தூதுவர்கள்,துருக்கி அரசின் மூத்த அதிகாரிகள், வணிகத்துறையைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள், பிரபலமான பேராசிரியர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்நிகழ்வு தூதுவரின் சேவையை பாராட்டும் விதமாகவும், பணி மற்றும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் விதமாகவும், இலங்கை–துருக்கி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தருணமாகவும் அமைந்தது.

Popular

More like this
Related

எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

மார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு...

துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம்...

வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள்...

புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்

நேற்றைய தினம் புத்தளம் - கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில்...