துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு சிறைச்சாலை வளாகத்தினுள் துமிந்த சில்வாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வாக்குமூலம் அளிக்கும் சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள ‘தெமட்டகொட ருவன்’ எனப்படும் சந்தேகநபருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவே துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...