அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

Date:

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.

எனினும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் ஏற்ப்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக இன்றைய தினம் சொத்து விபரங்களை முன்வைப்பதில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் அடுத்த மாதம் 7ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை தமது சொத்து விபரங்களை முன்வைப்பதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் சொத்து விபரங்களை முன்வைப்பதற்கான இணையத்தளத்தை அணுக முயற்சித்துள்ளதால் இந்த தடங்கல் ஏற்ப்பட்டுள்ளதாகக தெரியவந்துள்ளது.

தமது சொத்து விபரங்களை முன்வைக்க தவறும் அரச ஊழியர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனப பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...