நீதிமன்றில் சரணடைந்த நாமலுக்கு பிணை

Date:

நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை மீறி, பொது ஒழுங்கை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அம்பாந்தோட்டை பிரதம நீதவான் ஓஷத் மிகார நேற்று (28) பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ நகர்த்தல் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணையின் கீழ் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 102 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி, கட்டுநாயக்காவில் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அவரது ஆதரவாளர்கள் குழு விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.

பின்னர் நாமல் ராஜபக்ஷ பி.ப. 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விருந்தினர்களுக்கான வழி ஊடாக அவர் வௌியேறினார்.

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...