ரஷ்யாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை

Date:

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரஷ்யா அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ரோமன் ஸ்டாரோவாய்ட்.

அவரை ஜனாதிபதி புட்டின் பதவியிலிருந்து நீக்கி திங்கள்கிழமை(ஜூலை 7) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய வான் வழி ட்ரோன் தாக்குதல்களால் விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

அவர் ஆளுநர் பதவி வகித்தபோது அரசு பணத்தை முறைகேடாக செலவழித்தாதகவும் குற்றச்சாட்டு உள்ளது. ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கிவிட்டு அப்பதவியில், அவருக்கடுத்த நிலையில் பொறுப்பு வகித்த ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் அவரது மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...