பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!

Date:

வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணம் 0.55 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜெயவர்தன குறிப்பிட்டார்.

புதிய கட்டண திருத்தத்தின் கீழ், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.27, இரண்டாவது கட்டணம் ரூ.35, மூன்றாவது பேருந்து கட்டணம் ரூ.45 ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

இருப்பினும், நான்காவது பேருந்து கட்டணக் காலத்திலிருந்து அவை திருத்தப்படும்.

அதன்படி, ரூ.56, ரூ.77, ரூ.87, ரூ.117, ரூ.136 மற்றும் ரூ.141 உள்ளிட்ட பல கட்டணங்கள் ஒரு ரூபாவால் குறைக்கப்படும்.

மேலதிகமாக, ஏனைய கட்டணங்கள் முறையே 2 மற்றும் 3 ரூபாய் குறைக்கப்படும்.

இதற்கிடையில், திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்களை அனைத்து பேருந்துகளிலும் காட்சிப்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், புதிய திருத்தத்தின்படி கட்டணம் வசூலிக்கப்படாவிட்டால், 1955 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜெயவர்தன வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...