கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (‍NWSDB) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, 7 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என்றும் NWSDB குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவை நகர சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இதேபோன்று, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...