பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார்.
பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்று ரயில் சாரதிகள் கூறுகின்றனர்.
நேற்று ரயில்வே பொது முகாமையாளருடன் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.