கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை!

Date:

இன்றையதினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

தொழுகைக்கு முன் வுளு செய்வதற்கு குறைந்தளவு தண்ணீர்: பிரிட்டன் அரசு அமைப்பின் வழிகாட்டுதலால் சர்ச்சை!

பிரிட்டனின் நீர் விநியோகத் துறை முறைப்படுத்தும் அரசு சார்பற்ற அமைப்பான Ofwat...

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: 94,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் பலி!

இலங்கையில் இந்த ஆண்டு மொத்தம் 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 71...

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...