ஜனாதிபதி திஸாநாயக்கவின் தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிக்கும் ‘அனுர மீற்றர்’

Date:

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் கொண்டதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக 22 வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனுரா மீட்டரைப் புதுப்பிப்பதற்கான தகவல்கள் மூன்று மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன:

1) வெளியிடப்பட்ட ஆதாரங்களில் காணப்படுவது,

2) தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு பெறப்பட்ட பதில்கள், மற்றும்

3) பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பகமான தகவல்கள்.

Manthri.lk பக்கத்தில் உள்ள Anura Meterஐ பார்வையிடுவதன் மூலம் பயனர்கள், யோசனைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...