தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம்: தடையுத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு

Date:

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (17)  ரத்து செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு போரால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக...

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அறிவிப்பு!

இயல்பான நுகர்வின் கீழ் இலங்கையில் எரிபொருள் கையிருப்பு எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர்...

Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின்...