நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான பலத்த மழை..!

Date:

இன்றையதினம் (18) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு திசைகளிலிருந்து வீசக் கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வரை காணப்படும்.

Popular

More like this
Related

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...

வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்; இலங்கைக்கு IMF வலியுறுத்து!

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை...

ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க...