நியூயார்க் மான்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை: தன்னைத்தானே சுட்டு கொலையாளியும் தற்கொலை!

Date:

நியூயார்க் மாகாணத்தில் பொலிஸ்  அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை அணிந்துவந்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் BMW காரில் வந்த ஒருவர் தனது கையில் M14 துப்பாக்கியுடன் வணிக வளாகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நெவாடாவைச் சேர்ந்த ஷேன் டமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...