ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் களுத்துறை மத்துகம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரி பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஜகத் விதானவின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்படுகிறது.