கடந்த 5 ஆண்டுகளில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 49 சந்தேக நபர்கள் உயிரிழப்பு!

Date:

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 49 சந்தேக நபர்கள் கடந்த ஐந்து (2020 – 2025) ஆண்டுகளில் மரணமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (02) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மோதல்களில் 30 பேர் மரணித்துள்ளதோடு, அதில் 19 பேரை காணவில்லை எனவும் இது பாரதுரமான நிலைமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சிறையில் இருக்கும்போது ஏற்படும் உச்ச சித்திரவதைகளின் போதே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒரு சிலரால் செய்யப்படும் இந்த சம்பவங்கள் முழு கட்டமைப்பையும் சீர்குலைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நாட்டில் எந்தவொரு நபருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு சார்பாகவும் எதிராகவும் செயற்பட உரிமை உண்டு.

பொதுமக்கள் குற்றங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதால் அவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் தகவல்களை வழங்க தயங்குகிறார்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக, சில பொலிஸ் நிலையங்களில் ‘சந்தேகத்தின் பேரில் கைது’ என்று குறிப்பிடுகின்றனர், ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது என்று சொல்ல முடியாது.

கைது செய்ய வேண்டுமென்றால், தவறு செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...