2026 புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!

Date:

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இதன்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான உண்மைகளை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமயம் ஆகிய பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தேர்வுப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...