அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் Seat belt அணிவது கட்டாயம்!

Date:

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார்.

வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2011 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொறிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருகின்றன.

எனவே, இன்று முதல் பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...