ஜம்இய்யதுல் உலமா ஏற்பாட்டில் சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சி

Date:

2025.07.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்த ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியானது சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் ஆளணியினரான அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வு பெறும் இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தல், அவர்களிடையே நல்ல சிந்தனைகளை விதைத்தல் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...