60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

Date:

தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும்.

இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,

எனது பிரதிநிதிகள் இன்று (02)  காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலியர்களுடன் நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர்.

இதன்போது 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். சமாதானத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்பந்தம் இல்லையென்றால் நிலைமை மோசமடையும் என்றார்.
இன்றுவரை காசாவில் 56,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 228 பத்திரிகையாளர்கள் கடமையின் போது குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...