அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

Date:

நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்  இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அவரை கைது செய்ய நுகேகொடை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

முன்னதாக எங்கள் மக்கள் சக்தி (அபே ஜனபலவேகய) கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்துரலிய ரத்தன தேரரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலிய ரத்தன தேரர் பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களாக தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...