நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்

Date:

சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக, இவ்வருடம் ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று நண்பகல் 12:11 மணியளவில் வான்கலை, ஓமந்தை, வேதகிலங்குளம், கெலபோகஸ்வௌ, மற்றும் திரிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

உலக சுற்றுச்சூழல் தினம் 2026: புத்தளத்தின் சூழலியல் சவால்களும் உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கையும்!

ஆக்கம்: மொஹமட் ரிஃபாய் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று அதன் 54ஆவது...

நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்!

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09...

முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு...

டெல்லி மால்வியா ஹோட்டல் தீ விபத்து: 21 பேர் பலியான சோகத்திலும் மனிதநேயத்தை மீட்டெடுத்த 5 முஸ்லிம் இளைஞர்கள்!

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த...