உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

Date:

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியது.

இந்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் தலைமையில் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் கூடிய போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்களில் குழுக்களை நியமிக்கும் போது சிவில் சமூக பிரதிநிதிகளை அந்தக் குழுக்களின் அங்கத்தவர்களாக நியமிப்பதற்கு தற்போது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பாதுகாத்து பிரஜைகளின் விரிவான பங்களிப்புடன் கூடிய நிர்வாக முறையை ஸ்தாபித்தல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என அதற்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

அதற்காக முன்னோடி வேலைத்திட்டமொன்று களுத்துறை மாவட்டத்தில் பேருவளை நகர சபையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் 21 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்தும் முறை தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு மேல்மாகாண உள்ளூர் அதிகாரசபைகள் ஆணையாளருக்கு குழு ஆலோசனை வழங்கியது.

அத்துடன், தற்பொழுது செயலற்றுக் காணப்படும் திறந்த அரசாங்க பங்குடைமை (Open Government Partnership) தொடர்பில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்கவினால் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அதனை மீண்டும் செயற்படுத்தும் நிலைக்கு கொண்டுவருவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்வதற்குத் தேவையாக கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கௌரவ உறுப்பினர்களிடமிருந்து பெறுவதற்கும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஒன்றியத்தினால் மேற்கொள்ள எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களுக்குத் தேவையான பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களுடன் மேலும் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...