கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

Date:

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற  நீதிபதியின்  வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கு ஒன்றிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய நேற்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.

இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய அப்பெண் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி  300 ரூபாயை  நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

Popular

More like this
Related

52 ஆண்டுக்கால ஏக்கம்: துருக்கியில் முதன்முறையாக மணமகன் ஆடை மற்றும் மணமகள் ஆடை அணிந்து அசத்திய முதிய தம்பதி!

துருக்கியின் சாம்சூன் மாகாணத்தில் உள்ள அட்டகும் மாவட்டத்தில் பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழ...

ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் : சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன்...

நாட்டில் டெங்குப் பரவல் அதிகரிப்பு!

வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக...

தமிழகத்தில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு: ‘ஈஸ்டர் தாக்குதல்’ நூல் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் வழங்கி வைப்பு!

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தமிழக மக்களிடையேயும்,...