தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

Date:

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உத்தரவினை நேற்று (18) பிறப்பித்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணையை உத்தரவினை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

அந்த விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Popular

More like this
Related

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

-லத்தீப் பாரூக் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள்...

அடுத்த கட்டத்தை எட்டியது ‘மக்கா ஒப்பந்தம்’: சவூதியில் அமைகிறது நிரந்தர செயலகம்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் தங்கள்...

இஸ்தான்புல் நகரில் இன்று ‘மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ தொடர்பான முதல் கூட்டம்.

'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் நிறுவப்பட்ட 'மூலோபாய அரசியல் மற்றும்...