நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Date:

இன்றையதினம் (01) நாட்டின் வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...