புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

Date:

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2026ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று, பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான ஆயர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவௌவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர்.

இதேவேளை பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்வியை வழிநடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

 

தொழிற்கல்வியை வழிநடத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

எல்லா பிள்ளைகளுக்கும் உயர்தரமாகக் கருதப்படும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுடன், கடற்றொழில், மின் பொறியியல் துறை மற்றும் வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின் பெறுமதியை விளக்கி, அத்துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், அந்த தேர்வு செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...