ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்  கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...