இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

Date:

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார்.

இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு திறமையான குழு நியமிக்கப்பட்டதாகவும்  ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமந்த ஹுலங்கம மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கிய அமெரிக்க தூதர் ஆகியோரின் பங்கேற்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

அத்துடன் அமெரிக்கா முன்வைத்த சில திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும், இன்னும் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

பொருளாதாரம் பாதிக்கப்படும் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள். இடைக்கால ஜனாதிபதி என்பதொன்று ஏற்படாது. மாற்று வழியில் அரசியல் செய்யுங்கள் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் வரைபுக்கமைய பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும். அத்துடன் அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை என்பதுடன் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...