கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

Date:

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர் ஹாஷிமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோபா குழுவின் தலைவர் பதவியில் இருந்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பதவி விலகல் செய்துள்ளார்.நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போது அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.

கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கோபா குழுவின் தலைவராக  அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டதுடன், சுமார் ஏழு மாதங்களாக இந்தப் பதவியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள கபீர் ஹாசிமின் நியமனம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...