இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட காசா பத்திரிகையாளரை ‘பயங்கரவாதி’ என குற்றம்சாட்டி செய்தி வெளியிட்ட மேற்கு ஊடகங்கள்: உலகளவில் கண்டனம்!

Date:

காசா பகுதியில் நேற்று அதிகாலை அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் உள்ள பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜசீரா செய்தியாளர் அனஸ் அல்-ஷெரீபை பல மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் ‘பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியதற்கு உலகளவில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எந்த ஆதாரமும் இல்லாமல், ராய்ட்டர்ஸ், ஸ்கை நியூஸ், தி டெலிகிராஃப் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகியவை இஸ்ரேலுக்கு ஆதரவை வெளிப்படுத்தி பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

பத்திரிகையாளர் அல்-ஷெரீப் கொல்லப்படுவதற்கு முன்பு பல மாதங்களாக இஸ்ரேலிய இராணுவத்தின் அவதூறு பிரச்சாரத்திற்கு இலக்காக இருந்தார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

இருப்பினும், டெல் அவிவ் ஹமாஸுடன் தொடர்புடையவர் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.

இஸ்ரேலிய இராணுவம் இதுவரை முன்வைத்த எதுவும் அவர் ஹமாஸின் தீவிர உறுப்பினர் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் கடைசி செய்தியாளர்களில் ஒருவரான அல்-ஷெரீப், 2024 இல் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை ஒளிபரப்பியதற்காக புலிட்சர் பரிசை வென்ற ராய்ட்டர்ஸ் குழுவில் ஒருவராக இருந்தார்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...