உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Date:

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பொருள் வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்புப் பொருள் வரி 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான சிறப்புப் பொருள் வரி ஒரு கிலோ கிராமுக்கு 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தம் நேற்று முதல் 3 மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள உள்ளூர் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...