உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு அமைச்சர் அனைத்து தபால் ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக நேரக் கொடுப்பனவு உரிய வகையில் செலுத்தப்படாமை மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட 19 விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அதிகாரிகள் சங்கம், ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்த போதிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உப தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.