கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

Date:

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கம்மல்துறை அல்பலாஹ் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போதே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன்போது கம்பாஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலா பூஷணம் எம்.ஏ.ஏம்.நிலாம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஜே. எம். தாஜுதீன் நியமிக்கப்பட்டார்.

செயலாளராக பியாஸ் முகம்மத் மற்றும் பொருளாளராக எம். எம். பௌஸான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம். ஜே. எம். தாஜுதீன்,எம் எப். புஷ்ரா,அஹ்சன் ஆரிப், நாச்சியாதீவு பர்வீன், ஸிராஜ் எம் சாஜகான், முஷாரப் மொஹிதீன், எம். எம். இஸ்மதுல் ரஹ்மான் மற்றும் எஸ்.ஏ. எம். பவாஸ். ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...