தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

Date:

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் (National Cyber Security Operations Centre) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையம், இலங்கை கணணி அவசரப் பதிலளிப்பு நிறுவனம்  மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத் திட்டத்தின் மூலம் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் அனுமதியின்றிய நுழைவுகளை அடையாளங் காண முடியும் எனவும், அரச நிறுவனங்கள் வழங்கும் அத்தியாவசிய சேவைகள், தனிப்பட்ட தரவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...