எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மாலையில் மழை

Date:

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (22) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு திசைகளிலிருந்து வீசக் கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25-35 கி.மீ. வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல்...

சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...