மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவி நிலை வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பதவி நியமனம் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார்.
