நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

Date:

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

புத்தளம் தள வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பு நிகழ்வும் பதில் அத்தியட்சகரின் விடைபெறுதல் நிகழ்வும்

புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள...

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர்...