காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் அடங்குவர்.
மருத்துவமனை தாக்கப்பட்டபோது மருத்துவமனையின் பிரதான வாயிலில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தில் இருந்த ஏழு பேர் கொண்ட குழுவில் அவர்களும் அடங்குவர்.
இஸ்ரேலிய இராணுவம், அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டது.
அவரை “பயங்கரவாதி” என்றும், அவர் “பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டது.
இஸ்ரேலுக்கும், அல் ஜசீராவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.