60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

Date:

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம்.

பலஸ்தீன தரப்பு போர் நிறுத்த திட்ட நிபந்தனைகள் பின்வருவன அடங்கும்:

1. உயிருள்ள 10 கைதிகள் மற்றும் 18 உடல்களை விடுவித்தல்.

2. மனிதாபிமான அமைப்புகள், ரெட் கிரசண்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் காசாவிற்கு உதவி வழங்குதல்.

3. 60 நாள் போர் நிறுத்தம்.

4. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

5. ஷுஜாயியா மற்றும் பெய்ட் லாஹியா சுற்றுப்புறங்களைத் தவிர்த்து வடக்கு மற்றும் கிழக்கு காசா பகுதியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்கு இஸ்ரேலிய படைகள் பின்வாங்கப்படும்.

6. உயிருள்ள 10 கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 140 பாலஸ்தீன கைதிகளையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அனுபவிக்கும் 60 கைதிகளையும் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. ஒவ்வொரு உடலுக்கும், 10 பாலஸ்தீன உடல்கள் ஒப்படைக்கப்படும்.

8. அனைத்து பாலஸ்தீன மைனர் மற்றும் பெண் கைதிகளின் விடுதலை.

Popular

More like this
Related

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

-லத்தீப் பாரூக் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள்...

அடுத்த கட்டத்தை எட்டியது ‘மக்கா ஒப்பந்தம்’: சவூதியில் அமைகிறது நிரந்தர செயலகம்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் தங்கள்...

இஸ்தான்புல் நகரில் இன்று ‘மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ தொடர்பான முதல் கூட்டம்.

'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் நிறுவப்பட்ட 'மூலோபாய அரசியல் மற்றும்...