பிரித்தானிய ஆய்வாளரும் நூலாசிரியருமான ஹம்ஸா அந்தரீஸ் சோர்ஸிஸ் எழுதிய The Devine Reality என்ற ஆங்கில நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் நாளை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
ஆய்வுக்கும் கற்கைகளுக்குமான மன்றத்தினால் (FRS) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு நாளை (28) மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.
இறைவனின் இருப்பு தொடர்பில் விளக்கும் இந்த நூல் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி பீடத்தின் நாட்டிய மற்றும் அரங்கக் கலை வருகைதரு விரிவுரையாளர் சமன் புஷ்ப லியனகே யினால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழிப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசின்ஹ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுமேத வீரவர்தன, மத ஆய்வாளர் ஷான் சிராஜ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.