பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

Date:

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம் சேவையின் முதுபெரும் கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப், (03) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானாா்.

நாடகத் துறையில் தனக்கென தனியான பெயரைப் பெற்றிருந்தவர். மேடை நாடகம், வானொலி நாடகம், சினிமா, சின்னத்திரை என இவரது கலைப்பயணம் நீண்டிருந்தது.

இஸ்லாமிய கீதங்கள் பலவற்றையும் இவர் பாடியுள்ளார்.“லியாஉல் – ஃபன்னான்” கலைச்சுடர் எம்.எம்.ஏ லத்தீப் “புதுக்கடை லத்தீப்” என கலை உலகில் பவனி வந்தவர்.
1945 இல் கொழும்பு, புதுக்கடையில் பிறந்தவர். அரசு விருதுகள் மற்றும் பல விருதுகளையும் பெற்றவர்.

முஸ்லிம் சேவையில் பல நாடகங்களில் தனது குரலால் மக்கள் மனதையும் வென்றவர்.

அன்னாரது ஜனாஸா, (04) திங்கட்கிழமை ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 12:30 மணியளவில், கொழும்பு – மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...