‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

Date:

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​கச்சத்தீவின் உரிமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அரசாலோ அல்லது ராஜதந்திர ரீதியாகவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும், இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...